உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா துவங்கியது அதிக புத்தகம் வாங்கினால் இஸ்ரோ செல்லலாம்

மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா துவங்கியது அதிக புத்தகம் வாங்கினால் இஸ்ரோ செல்லலாம்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் பத்து நாட்கள் நடைபெறும், புத்தகத் திருவிழா துவங்கியது. இதில் பள்ளி அளவில் முதன்மையாக அதிக புத்தகங்கள் வாங்கும் மாணவன், தனது ஆசிரியர் ஒருவரோடு இஸ்ரோ செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மேட்டுப்பாளையத்தில் நான்காவது புத்தகத் திருவிழா, இ.எம்.எஸ்., திருமண மண்டபத்தில் துவங்கியது. இங்கு, 50க்கும் மேற்பட்ட புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு தேவையான தமிழ், ஆங்கில கதை, கட்டுரைகள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.ஸ்டால்களில், 200 ரூபாய்க்கு புத்தகம் வாங்கும் மாணவர்களுக்கு, கோளரங்கம் பார்க்கும் வாய்ப்பும், 500 ரூபாய்க்கு புத்தகம் வாங்கும் மாணவர்கள், தனது குடும்பத்தோடு கோளரங்கம் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி அளவில் முதன்மையாக அதிக புத்தகங்கள் வாங்கும் மாணவன், தனது ஆசிரியர் ஒருவரோடு இஸ்ரோ செல்லவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழா, செப்டம்பர் 1ம் தேதி வரை, 10 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாலையில் சிறந்த பேச்சாளர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, சிந்தனை கவிஞர் கவிதாசன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, பேராசிரியர் ஞானசம்பந்தன், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமார் உள்பட எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் பேச உள்ளனர்.மேலும் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காலை, 10:00 மணியிலிருந்து இரவு, 9:00 மணி வரை புத்தக ஸ்டால்கள் திறந்திருக்கும். இதற்கான ஏற்பாடுகளை புத்தகத் திருவிழா வரவேற்பு குழு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்து வருகிறது.மேட்டுப்பாளையம் இ.எம். எஸ். திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நான்காவது புத்தகத் திருவிழா துவங்கியது.மேட்டுப்பாளையம் இ.எம்.எஸ்., திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நான்காவது புத்தகத் திருவிழா துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ