மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
15 hour(s) ago
ஊட்டி;ஊட்டி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.ஊட்டி அருகே நுந்தளா பகுதியில் உள்ள பெட்டி கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், ஊட்டி ஊரக போலீஸ் எஸ்.ஐ., தனபால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது உறுதியானது.கடை உரிமையாளரான நுந்தளா மட்டத்தை சேர்ந்த அய்யப்பன், 62, என்பவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பெட்டிக்கடைக்கு போலீசார் 'சீல்' வைத்தனர்.
15 hour(s) ago