உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தரமற்ற இலைகளால் கூட்டுறவு தொழிற்சாலை... நிர்வாகம் அதிர்ச்சி! கொள்முதல் மையங்களில் ஆலோசனை கூட்டம்

தரமற்ற இலைகளால் கூட்டுறவு தொழிற்சாலை... நிர்வாகம் அதிர்ச்சி! கொள்முதல் மையங்களில் ஆலோசனை கூட்டம்

மஞ்சூர்;கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு தரமற்ற பசுந்தேயிலை வருவதால், அதிர்ச்சியடைந்த நிர்வாகங்கள், கொள்முதல் மையங்கள் தோறும் சென்று உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றன.நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் 'இன்கோ சர்வ்' கட்டுப்பாட்டின் கீழ், மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, எடக்காடு, கைக்காட்டி, மேற்குநாடு, இத்தலார், நஞ்சநாடு, கரும்பாலம், எப்பநாடு, பிராண்டியா, சாலிஸ்பரி, கட்டபெட்டு உள்ளிட்ட, 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் உள்ள, 25 ஆயிரம் உறுப்பினர்கள், தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர்.

கரட்டு இலையால் பிரச்னை

மாவட்டத்தில் கடந்தாண்டில் பருவமழை பொய்த்ததாலும், நடப்பாண்டில் ஏப்., இறுதி வரை மழை பெய்யவில்லை. இதனால், கடும் வறட்சி நிலவியது. பசுந்தேயிலை மகசூல் குறைந்தது. தேயிலை தோட்டங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் சில பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால், தொழிற்சாலை உறுப்பினர்கள் வினியோகிக்கும் இலையை தொழிற்சாலை 'டிரப்' களில் கொட்டி உலர்த்தப்பட்ட பின் தான் அரைக்கப்படுகிறது. இலையுடன்கரட்டு இலை, செங்காம்பு அதிகரித்து வருவதை பார்த்த தொழிற்சாலை நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

சுற்றறிக்கையில் அறிவுரை

இதை தொடர்ந்து, 'இன்கோ சர்வ்' நிர்வாகம், 'இது போன்ற கரட்டு இலைகளை கொள்முதல் மையங்களில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் நிராகரிக்க வேண்டும்,'என, சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் தங்கபாண்டியன், பல கொள்முதல் மையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். அங்கு வரும் உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, 'தரமான இலைகளை வினியோகிக்க வேண்டும்,' என, உறுப்பினர்களிடம் அறிவுறுத்தினார்.அதேபோல, பிற கூட்டுறவு தொழிற்சாலைகளில் நிர்வாகம் இயக்குனர்களும் உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை நடத்தி தரமான இலைகளை வினியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ