பைக் - கார் மோதல்: கல்லூரி மாணவர் பலி
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் கோழிபாலத்தை சேர்ந்தவர் தனுஷ், 20. இவர், கூடலூர் அரசு கல்லூரியில் படித்து வந்தார். இன்று, காலை பைக்கில், கூடலூர் செல்லும் போது, கோழிக்கோடு சாலை, நந்தட்டி அருகே, எதிரே வந்த காரும் - பைக் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் தனுஷ் உயிரிழந்தார்.இது குறித்து கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.