மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
7 hour(s) ago
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
7 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
7 hour(s) ago
தென் மாநில தேயிலை ஏலங்களில் சரிவு
7 hour(s) ago
குன்னுார் :குன்னுார் ஜோசப் கான்வென்ட் மற்றும் ஐ.சி.எஸ்.இ., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. கொல்கத்தா கிழக்கு ராணுவ படை (ஈஸ்டர் ஆர்மி கமாண்டர்ஸ்) கர்னல் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பள்ளி மாணவியரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு பேசுகையில்,''தற்போது ராணுவத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ராணுவம் மற்றும் ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்க மாணவிகள் முன் வர வேண்டும்,'' என்றார்.அதில், தடகள போட்டிகள், உயரம் தாண்டுதல் , நீளம் தாண்டுதல் , குண்டு எறிதல், தட்டெறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல், 2 வரையிலான மாணவியரின் இசை நடனம் அனைவரையும் கவர்ந்தது. வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற புனித மைக்கேல் அணிக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது.விழாவிற்கு, கான்வென்ட் முதல்வர் அருட்சகோதரி அலெக்ஸ் ராணி, தாளாளர் அருட்சகோதரி மரிய கொரட்டி, ஐ.சி.எஸ்.இ., முதல்வர் சகோதரி செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் உட்பட ஆசிரியைகள் செய்திருந்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago