உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சீல் அகற்றி பணிகள் நடக்கும் கட்டடங்களால் சர்ச்சை

சீல் அகற்றி பணிகள் நடக்கும் கட்டடங்களால் சர்ச்சை

குன்னுார் : குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விதிமுறைகளை மீறி ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடங்கள் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, 'சீல்' வைத்து வருகின்றனர்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீல் வைத்த பல கட்டடங்கள், தற்போது ஆளும் கட்சியினர் சிலரின் ஆதரவுடன் அகற்றப்பட்டு மீண்டும் கட்டுமான பணிகள் நடந்துள்ளன. அதில், பெட்போர்டு பகுதியில், 4 முறை சீல் வைத்த கட்டடத்தில், சீல் அகற்றப்பட்டு பணிகள் நடந்துள்ளது.பெட்போர்டு பகுதியில், ஆக்கிரமிப்பு கட்டடம் ஒன்றுக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். அதிலும், சீல் அகற்றப்பட்டு அங்கு பணிகள் நடந்து வருகிறது.கலெக்டருக்கு உள்ளூர் மக்கள் அனுப்பிய மனுவில், 'குன்னுார் பகுதிகளில் 'சீல்' வைத்த கட்டடங்கள் குறித்து மீண்டும் ஆய்வு செய்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை