உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளியில் பவள விழா; சாதித்த மாணவர்கள் கவுரவிப்பு

அரசு பள்ளியில் பவள விழா; சாதித்த மாணவர்கள் கவுரவிப்பு

குன்னுார்; குன்னுார் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி, 75வது ஆண்டு பவள விழாவில், விளையாட்டு போட்டிகளில் சாதித்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.குன்னுார் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில், 75வது ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது.சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி தலைவி சுசிலா,துணைத் தலைவர் வாசிம் ராஜா பங்கேற்று, தமிழ் மொழி முக்கியத்துவம் குறித்து பேசினர். தலைமையாசிரியை டாஃப்னி மார்கிரேட், ஆண்டு அறிக்கையை வாசித்தார். தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் சையது மன்சூர், லியாகத் அலி மற்றும் சமூக ஆர்வலர் உஷா பிராங்க்ளின் உட்பட பலர் பேசினர்.பல்வேறு போட்டிகளில் சாதித்த மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள் அணிவித்து கவுரவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மேலும், பள்ளிகளுக்கு இடையேயான யோகா, கேரம் உட்பட விளையாட்டு போட்டிகள்; தேசிய, மாநில ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று சாதித்த மாணவர்கள் கோப்பைகள், பதக்கங்களுடன் கவுரவிக்கப்பட்டனர்.பள்ளியின் முன்னாள் மாணவர்கள், லட்சுமி நாராயணன், ராஜன், ஹாக்கி இந்தியா அமைப்பின் பொருளாளர் ராஜா உட்பட பலர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சத்யா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மணிமேகலை, உறுப்பினர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.முதுகலை தமிழாசிரியை சக்தி வடிவு வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர்கள் அப்ரோஸ் பானு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !