உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீர் வழி உரமிட்டால் பயிர் வளர்ச்சி சீராக இருக்கும்

நீர் வழி உரமிட்டால் பயிர் வளர்ச்சி சீராக இருக்கும்

சூலூர் : 'நீர் வழி உரமிடும் முறையை கடைபிடித்தால், பயிர்கள் சீராக வளரும்' என, வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.நீர் வழி உரமிடல் குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:பயிர்களுக்கு உரங்களை அப்படியே இடும்போது, அனைத்து பயிர்களுக்கும் அதன் சத்துக்கள் கிடைக்காது. 30 சதவீத உரங்கள் வீணாகிவிடும். இதனால், உரச்செலவு தான் அதிகரிக்கும். இதற்கு மாற்றாக நீர் வழி உரமிடல் முறையை கடைபிடித்தால், உரங்களின் சத்துக்கள் அனைத்து பயிர்களுக்கும் சீராக கிடைக்கும். உரத்தொட்டியில் உரங்களை கரைத்து, நீர் பாசனம் வழியாக கலந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பயிர்களுக்கு அளிக்கலாம். இதனால், பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கும். இரண்டரை ஏக்கருக்கு தேவையான உரத்தை, 10 நிமிடத்தில் கரைத்து ஊற்றிடலாம். இதனால் விரயமின்றி உரச்சத்துகள் பயிர்களுக்கு கிடைக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ