உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழ கண்காட்சி போட்டி: விண்ணப்பம் வினியோகம்

பழ கண்காட்சி போட்டி: விண்ணப்பம் வினியோகம்

ஊட்டி;தோட்டக்கலைத் துறை மூலம், சிம்ஸ் பூங்கா பழக் கண்காட்சி போட்டியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் மே 24ம் தேதி முதல், 26ம் தேதி வரை, மூன்று நாட்கள் பழ கண்காட்சி நடக்கிறது. பழ கண்காட்சியை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள சிறந்த பழத்தோட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.போட்டிகளுக்கான விண்ணப்ப படிவங்கள், குன்னார் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில், ஒரு பதிவுக்கு,75 ரூபாய் செலுத்தி, 29ம் தேதி முதல், மே 10ம் தேதி வரை பெற்று கொள்ளலாம்.மேலும், ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலுார் பகுதியில் இருந்து பங்கேற்கும் போட்டியாளர்கள் அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மே 11ம் தேதிக்குள் குன்னுார் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.சிறந்த பூங்காக்களை தேர்வு செய்யும் குழு, மே 13ம் முதல், 15ம் தேதி வரை, குன்னுார், ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலுார் பகுதிகளில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், விவரங்களுக்கு குன்னுார் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை, 0423 -2231718, 0423- -2230395 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ