உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளியில் பிரிவு உபசார விழா

பள்ளியில் பிரிவு உபசார விழா

குன்னுார்:சோகத்தொரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமை வகித்து பேசினார். ஆசிரியர்கள் சுசிலா புஷ்பா ஹேமலதா சித்ரா முன்னிலை வகித்தனர்.கடந்த, 8 ஆண்டுகளாக பள்ளியில் படித்த முனிஸ்வரன் மற்றும் சவுமியா ஆகியோர் பள்ளி அனுபவங்கள் குறித்து பேசினர். எல்.கே.ஜி., முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு பென்சில், பேனாக்களும், பள்ளிக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. 7ம் வகுப்பு மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ்களை, 8ம் வகுப்பு மாணவர்கள் வழங்கினர்.நடுநிலைப் பள்ளியை முடித்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பிரிந்து செல்வதால் நண்பர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் கார்த்திகா இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பிரியா சுகுணா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை