உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மஞ்சூர் பயணிகள் காத்திருக்கும் அவலம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மஞ்சூர் பயணிகள் காத்திருக்கும் அவலம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஊட்டி : ஊட்டியில் நடக்கும் சாலை பணியால் கிராமப்புற பயணிகள் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.ஊட்டி சேரிங்கிராஸ் - குன்னுார் சந்திப்பு இடையே ஆவின் பகுதியில் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஒட்டி, அந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஒரு வழிப்பாதையாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பிரதான சாலை என்பதால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக, மஞ்சூர் கெத்தை பஸ் காலையில், 9:00 மணிக்கு ஊட்டிக்கு வந்த பின், தாம்பட்டி கிராமத்திற்கு சென்று வருகிறது. மூன்று முறை அந்த கால்வாய் அமைக்கும் இடத்தை கடந்து செல்லும் போது, போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.இதனால், ஊட்டியிலிருந்து காலை, 8:15 மணிக்கு மேல்குந்தா பஸ் சென்ற பின், 10:15 மணிக்கு இயக்க வேண்டிய கெத்தை பஸ், 11:00 மணிக்கு மேல் தான் செல்கிறது. இதனால், மூன்று மணி நேரம் மஞ்சூர் செல்லும் பயணிகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் கூறுகையில், 'சாலை பணி முடியும் வரை, கெத்தை பஸ் மஞ்சூரிலிருந்து வரும் போது, தாம்பட்டி கிராமத்திற்கு சென்று பயணிகளை ஏற்றி, ஊட்டிக்கு வரும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிரமத்தை போக்க வேண்டும்,' என்றனர். கிளை மேலாளர் ராஜ்குமார் கூறுகையில், ''பயணிகளிடமிருந்து புகார் வந்துள்ளது. பொது மேலாளரிடம் பேசி உரிய தீர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி