உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை இ---பாஸ் பெண் பணியாளர்கள் அப்செட்

இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை இ---பாஸ் பெண் பணியாளர்கள் அப்செட்

கூடலுார்;நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, இ--பாஸ் பரிசோதனை பணியில் ஈடுபட்டுள்ள சுய உதவி குழு பெண்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை.ஊட்டியில், கோடை சீசனில் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. குறுகிய நகரமான ஊட்டியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில், மே, 7ம் முதல் ஜூன் 30ம் தேதி வரை வாகனங்கள் இ--பாஸ் பெற்று, நீலகிரி மாவட்டத்திற்கு வர வேண்டும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, இ--பாஸ் பெறுவது தொடர்பாக, நீலகிரி மாவட்டம் நிர்வாகம் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.'நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறித்து எவ்விதமான தடையும் இல்லை; முறையாக இ--பாஸ் பெரும் அனைத்து வாகனங்களும் நீலகிரிக்கு வரலாம்,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. மாவட்ட எல்லைகளில், இ-பாஸ் சோதனை பணியில் சுய உதவிக் பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். இ--பாஸ் நடைமுறை ஜூன், 30-ம் தேதி நிறைவடைந்து நிலையில், செப்., 30 வரை இ பாஸ் நடைமுறையில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்நிலையில், மாவட்ட எல்லைகளில், வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை பணியில் ஈடுபட்டுள்ள, சுய உதவி குழு பெண்களுக்கு இரண்டு மாதங்கள் முடிந்த நிலையிலும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை