உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கம்பத்தில் இருந்து விழுந்த மின் ஒப்பந்த ஊழியர் பலி

கம்பத்தில் இருந்து விழுந்த மின் ஒப்பந்த ஊழியர் பலி

பாலக்காடு: ​ பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி குன்னேங்காடு பகுதியை சேர்ந்தவர் பிஜு, 37. இவர், மின்வாரியத்தில் முடப்பல்லுார் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முடப்பல்லுார் பந்தபரம்பு இலக்கோடு அருகே, மின் கம்பத்தை மாற்றி அமைக்கும் பணிக்காக பிஜு கம்பத்தின் மீது ஏறியுள்ளார். அப்போது, உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை