உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழையிலும் பசுந்தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அட்டை பூச்சி கடியால் நாள்தோறும் அவதி

மழையிலும் பசுந்தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அட்டை பூச்சி கடியால் நாள்தோறும் அவதி

கூடலுார்:கூடலுாரில் தொடரும் மழையால் தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்கள் அட்டை பூச்சி கடியால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குளிரான கால நிலை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கட்டட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குளிரை பொருட்படுத்தாமல், தலையில் பிளாஸ்டிக் போர்வையை போர்த்தி கொண்டு பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழையின் ஈரப்பதம் காரணமாக தோட்டங்களில் அதிகரித்துள்ள அட்டை பூச்சிகளிடமிருந்து, பாதுகாத்து கொள்ள கால்களில், மூக்குப்பொடி அல்லது சீயக்காய் துாள் பயன்படுத்தி வருகின்றனர்.பெண் தொழிலாளர்கள் கூறுகையில், 'தினக்கூலி சம்பளத்தில் பணியாற்றி வரும் நாங்கள் வெயில், மழை என்று பாராமல் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒருநாள் விடுமுறை எடுத்தாலும் சம்பளம் கிடைக்காது. தற்போது, குளிருடன், அட்டை பூச்சிகள் கடையில் இருந்து பாதுகாத்து கொள்ள கடும் சிரமப்பட வேண்டி உள்ளது.எங்களின், பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரசு மழை காலங்களில் பயன்படுத்தும் வகையில் ரெயின் கோட் வழங்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை