உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அருவங்காட்டில் வெடி விபத்து

அருவங்காட்டில் வெடி விபத்து

குன்னுார்; குன்னுார் அருகே அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.குன்னுார் அருகே அருவங்காடு பகுதியில், வெடிமருந்து தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில், இங்கு நேற்று பயங்கர சப்தத்துடன் விபத்து ஏற்பட்டது. சைரன் ஒலிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. 'தொழிலாளர்களுக்கு, பாதிப்பு ஏற்படவில்லை,' என, தெரிய வந்தது. அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொழிலாளர்கள் கூறுகையில்,''இன்று (நேற்று) காலை, 12:30 மணியளவில், தொழிற்சாலையில் உள்ள பழைய மோட்டார் வெடித்து விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களுக்கு முன்பு அங்கிருந்த, 5 தொழிலாளர்கள் வெளியே வந்ததால், அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ