மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
20-Dec-2025
குன்னுார்;குன்னூரில் வனப்பகுதிகள் அருகே விழுந்துள்ள மின் கம்பங்களால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குன்னுார் ரேலியா அணை அருகே பெட்டுமந்து தோடர் பழங்குடியின கிராமம் செல்லும் சாலையோரத்தில் பல இடங்களிலும் மரங்கள் விழுந்துள்ளன.அதில், ரேலியா அணை அருகே சாலை ஓரத்தில் அருகில் உள்ள மின்கம்பங்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் மின்கம்பிகள் சில மரங்களின் கிளைகளிலும் உரசிவருவதால் மின்கசிவு அபாயமும் உள்ளது. வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டி உட்பட பல்வேறு இடங்ளிலும் விழுந்த மின்கம்பிகளை சீரமைக்க, குன்னுார் உட்பட பல்வேறு பகுதிகளிலும் பணியாளர்கள் சென்று இரவுபகலாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'இந்த பகுதிகளில் மின் வனியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காணப்படும்,' என்றனர்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025