உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொட்டபெட்டாவில் பாஸ்ட் டேக் சோதனை சாவடி பணி துரிதம்

தொட்டபெட்டாவில் பாஸ்ட் டேக் சோதனை சாவடி பணி துரிதம்

ஊட்டி;தொட்டபெட்டா சாலையில் 'பாஸ்ட் டேக்' சோதனை சாவடி இடம் மாற்றம் செய்யும் பணிக்காக துரிதமாக நடந்து வரும் நிலையில், பல சுற்றுலா பயணிகள் வந்து திரும்பினர்.ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்தை பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். தொட்ட பெட்டா பகுதியில் உள்ள சோதனை சாவடியில் வாகன நிறுத்த கட்டணம் செலுத்திய பின், அனுமதிக்கின்றனர். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை தவிர்க்க வனத்துறை சார்பில், தொட்ட பெட்டா சோதனை சாவடியில் 'பாஸ்ட் டேக்' நடைமுறை அமுல்படுத்தி ஒரு கி.மீ., துாரத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். இப்பணியை ஒட்டி இம்மாதம், 22ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிரகம் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.இந்நிலையில், நேற்றும் பல சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சந்திப்பு வரை வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ