உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு பொருளுதவி

நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு பொருளுதவி

பந்தலுார்:கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு, நீலகிரி மருந்து வணிகர்கள் சங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளது. கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். அதில், வீடுகள் மற்றும் பொருட்களை இழந்து, வாடகை வீடுகளில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு, நீலகிரி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில், தேவையான பொருட்கள் நேரடியாக வழங்கப்பட்டது.அங்கு மேப்பாடி பகுதியில் வாழும், 20 குடும்பங்களுக்கு, தேவையான பாத்திரங்கள், உடை, கட்டில் மற்றும் மெத்தைகள், பீரோ மற்றும் நாற்காலிகள், பாய் மற்றும் கம்பளிகள், ஸ்டவ், குக்கர், மிக்ஸி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. இதனை சங்கத்தின் மாவட்ட செயலாளர் அப்சல் தலைமையில், பொருளாளர் மகேஷ், சில்லறை விற்பனையாளர்கள் பிரிவு தலைவர் ஹரிராமன், நிர்வாகிகள் ஆசப்ஜா, கிரீஸ்குமார், ரியாஸ் சத்திய நாராயணன், சதீஷ் ஆகியோர் வழங்கினர். இதனை பெற்றுக் கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை