மேலும் செய்திகள்
சாலையில் விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு
02-Aug-2026
சாலையில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு
12-Jul-2026
குன்னூர், ஆக. 10– குன்னூர்– மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழை மற்றும் வெயில் என மாறுபட்ட காலநிலை நிலவி வரும் நிலையில் அவ்வப்போது காற்றும் வீசி வருகிறது. குன்னூர் –- மேட்டுப்பாளையம் சாலையில் சின்ன குரும்பாடி அருகே நேற்று அதிகாலை 3:30 மணியளவில் மரம் ஒன்று சாலையில் விழுந்தது. அப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சாலையில் விழுந்த மரத்தை அறுத்து, அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரத்தை அப்புறப்படுத்தியதை தொடர்ந்து, ஒரு மணி நேரத்தில் பின், போக்குவரத்து சீரானது.
02-Aug-2026
12-Jul-2026