உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலர் கண்காட்சி போட்டி :விண்ணப்பங்கள் வரவேற்பு

மலர் கண்காட்சி போட்டி :விண்ணப்பங்கள் வரவேற்பு

ஊட்டி:ஊட்டி தோட்டக்கலை துறை மூலம் பூங்கா போட்டியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஊட்டி தாவரவியல் பூங்காவில், 125 வது மலர்கண்காட்சி வருகிற மே மாதம் 19ம் தேதி நடக்கிறது. மலர்கண்காட்சியை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள சிறந்த பூங்காக்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போட்டிக்கான விண்ணப்ப படிவங்கள், ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை வழங்கப்படுகிறது. எனவே, பூங்கா உரிமையாளர்கள் படிவங்களை பெற்று கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும், 27ம் தேதிக்குள் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில், 100 ரூபாய் பதிவு கட்டணத்துடன் செலுத்த வேண்டும்.சிறந்த பூங்காகளுக்கான தேர்வு செய்யும் குழு, 29ம் தேதி முதல், மே மாதம் 5ம் தேதி வரை, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் கூடலுார் பகுதிகளில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், மலர் கண்காட்சி நாளன்று நடத்தப்படும் பல்வேறு போட்டிகளுக்கு, மே மாதம், 6ம் தேதி முதல்,8ம் தேதி வரை போட்டியாளர்கள், ஒரு பதிவிற்கு, 50 ரூபாய் செலுத்தி, பதிவினை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை