மேலும் செய்திகள்
தேனி கொட்டி 5 பேர் காயம்
10-Jul-2026
கூடலுார்: முதுமலை, வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வன காவலர் காட்டு யானை தாக்கி காயமடைந்தார். முதுமலை புலிகள் காப்பகம், முதுமலை வனச்சரகம் வனப்பகுதியில் வனகாவலர் மாதன் உள்ளிட்ட மூன்று வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புதர் பகுதியில் இருந்த திடீரென வெளியே வந்த காட்டு யானையை பார்த்து ஓடினர். யானை துரத்தி சென்று மாதனை தாக்கியது. உடன் சென்றவர்கள் சப்த்தமிட்டு, யானையை விரட்டி, அவரை மீட்டனர். காயமடைந்த அவரை சிகிச்சைக்காக, கூடலுார் மாவட்ட தலைமை மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
10-Jul-2026