மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
16 hour(s) ago
பந்தலுார்;பந்தலுாரில் நடந்த இலவச மருத்துவ முகாமில் திரளான மக்கள் பங்கேற்றனர்.பந்தலுார் பெரிய பள்ளிவாசல் மதரசா அரங்கில், டாக்டர் மூப்பன்ஸ் மருத்துவ கல்லுாரி, எஸ்.ஒய்.எஸ்., அமைப்பு இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. மஹல் கத்தீப் அப்துல் சலாம் சகாபி பிரார்த்தனை செய்தார். ஹபிபுள்ளா வரவேற்றார். முஹியுதீன் சகாபி முன்னிலை வகித்தார்.முன்னாள், எம்.எல்.ஏ., திராவிடமணி, மருத்துவக் கல்லூரி தமிழக பொறுப்பாளர் சிஜித், ஒருங்கிணைப்பாளர் மோகன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து, மருத்துவ பரிசோதனை, பொது மருத்துவம், இருதய பரிசோதனை, பொது அறுவை சிகிச்சை ஆலோசனை, பெண்கள் நோய்கள் குறித்து ஆலோசனை, எலும்பியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டதுடன், தேவைப்படுவோருக்கு மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன. திரளான மக்கள் பங்கேற்றனர்.
16 hour(s) ago