உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கட்டபெட்டு பஜாரில் குப்பை அகற்றம்

கட்டபெட்டு பஜாரில் குப்பை அகற்றம்

கோத்தகிரி;கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் தேங்கி இருந்த குப்பை அகற்றப்பட்டன.கோத்தகிரி கட்டபெட்டு பஜார், கக்குச்சி, ஜெகதளா மற்றும் நடுஹட்டி ஊராட்சிகளின் எல்லையில் அமைந்துள்ளது. மக்கள் நெரிசல் நிறைந்த இப்பகுதியில், குடியிருப்புகளில் இருந்து சேகரமாகும் குப்பை தொட்டியில் கொட்டப்படுகிறது. நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் குப்பை கொட்டப்பட்டு, அகற்றப்படாமல் இருந்தது. இதனால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று குப்பை முழுமையாக அகற்றப்பட்டு, குறிப்பிட்ட இடம் துாய்மைப்படுத்தப்பட்டது. 'எதிர்வரும் நாட்களில் சேகரமாகும் குப்பைகளை, உடனுக்குடன் அகற்றி, சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ