உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோல்டன் லீப் விருது; முதல் நிலை தேர்வு நிறைவு

கோல்டன் லீப் விருது; முதல் நிலை தேர்வு நிறைவு

குன்னுார்; குன்னுார் உபாசி சார்பில், சிறந்த தென் மாநில தேயிலை துாளுக்கான, 20வது 'கோல்டன் லீப் இந்தியா' விருதுகளுக்கான முதல் நிலை தேர்வு நடந்தது.குன்னுாரில் உள்ள தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி), தேயிலை வாரியம் சார்பில் தென் மாநில அளவில், சிறந்த தேயிலைக்கான, கோல்டன் லீப் விருதுகள் கடந்த, 19 ஆண்டாக வழங்கப்பட்டு வருகிறது. அதில், விருது வழங்குவதற்கான முதற் கட்ட தேர்வில், தேயிலையின் தரம், மனம், சுவை போன்ற குணங்கள்; 2ம் கட்ட தேர்வில், பூச்சிக்கொல்லி அளவு உட்பட பல்வேறு ஆய்வக பகுப்பாய்வு; 3ம் கட்டமாக ஒரு சர்வதேச குழுவின் இறுதி சுவை பரிசோதனையுடன் ஏலமும் விடப்படுகிறது. நடப்பாண்டின், 20வது கோல்டன் லீப் விருது தொடர்பாக, 'உபாசி' பொது செயலாளர் சஞ்சித் கூறுகையில், ''சிறந்த தேயிலை துாளுக்கான, 20வது ஆண்டு கோல்டன் லீப் விருதுகளுக்கான, முதற்கட்ட தேர்வு, 7, 8 தேதிகளில் கோவையில் நடந்தது. தென் மாநிலங்களில் உள்ள, 45 எஸ்டேட்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து, 165 ரக தேயிலை துாள்கள் பெறப்பட்டு முதற்கட்ட தேர்வு நடந்தது. இதை தொடர்ந்து, 2,3ம் கட்ட தேர்வுகள் நடத்தப்படும், குன்னுாரில் செப்., மாதம் நடக்கும் மாநாட்டில் 'கோல்டன் லீப்' விருதுகள் வழங்கப்பட உள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை