உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பசுமை நீலகிரி விழிப்புணர்வு

பசுமை நீலகிரி விழிப்புணர்வு

கோத்தகிரி : பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ, 'காலநிலையை மீட்டெடுப்போம்; சுற்றுச்சூழலை பாதுகாப்போம்,' என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.மேலும், பள்ளி வளாகத்தில், 'மகிழ் முற்றம் குழு' சார்பில், 20 பழ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. 'நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை, ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்பாக பராமரிப்பது,' என, உறுதிமொழி எடுக்கப்பட்டது.தொடர்ந்து, அனைவருக்கும் பசுமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மருத்துவர் திவ்யா, பள்ளி ஆசிரியைகள் கமலா, நளினி மற்றும் சமையலர் பத்மா உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ