மேலும் செய்திகள்
காட்டு நாயக்கர் சமுதாய கூட்டம்
13-Sep-2024
பந்தலுார் : பந்தலுார் அருகே சேரங்ரோடு ஊராட்சியில் பழங்குடியினருக்கான கழிப்பிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு மூலம், அனைத்து கிராமங்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, கழிப்பிடங்கள் இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அரசு மூலம் கழிப்பிடம் கட்டி தரப்பட்டு வருகிறது. அதில், பெரும்பாலான பழங்குடியினர் கிராமங்களில், கழிப்பிட கட்டுமான டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், பணிகளை முழுமை படுத்தாமல் பெயரளவிற்கு செய்ததால், தற்போதும் பழங்குடியினர்கள் திறந்தவெளியை கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். அதில், சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளியரா பழங்குடியின கிராமத்தில், காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு கட்டி தரப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் மழையில் ஒழுகி வருவதுடன், கழிப்பிட பணியை முழுமைப்படுத்தாமல் பாதியில் விடப்பட்டுள்ளது. பணி முடிந்து, 3- ஆண்டுகள் கடந்தும், கழிப்பிடம் இல்லாதது குறித்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை. பாதியில் நிறுத்தப்பட்ட கழிப்பிட கட்டுமானங்கள், முழுமையாக இடிந்து போகும் நிலை உருவாகி உள்ளது. எனவே, பள்ளியரா கிராமத்தில் நடந்துள்ள பணிகள் குறித்து, முழுமையான ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பழங்குடியின கிராமங்களிலும், கழிப்பிட கட்டுமான பணிகளை நிறைவு செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13-Sep-2024