மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
3 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
3 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
3 hour(s) ago
சூலூர் : விளை நிலங்களில் மண் மாதிரி எடுப்பது எப்படி என்பது குறித்து சுல்தான்பேட்டை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் பல்கலையில் நான்காம் ஆண்டு இளநிலை படிக்கும் வேளாண் மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் சுல்தான் பேட்டை வட்டார கிராமங்களில் களப்பயிற்சி எடுத்து வருகின்றனர். மொத்தம், 65 நாட்கள் பயிற்சியில், விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப பயிற்சி அளித்தல், நோய் தாக்கம் குறித்த ஆய்வு, புதிய பயிர் ரகங்களின் பயன்பாடு, தொழில்நுட்ப பயிர் முறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களில் பயிற்சி எடுத்து கொள்கின்றனர். விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாரப்பட்டி கிராமத்தில் மண் பரிசோதனைக்கு மாதிரிகள் எவ்வாறு எடுப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.மண் பரிசோதனை செய்து அதில் வரும் ஆய்வு முடிவுகளை கொண்டு, மண்ணில் என்ன சத்து குறைபாடு உள்ளது, எந்த சத்து அதிகமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அதன்மூலம், தேவையான சத்துக்களை மட்டும் மண்ணுக்கு இட்டு, அதற்கேற்ப பயிர் செய்து, விளைச்சல் எடுக்க முடியும், என, விளக்கினர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago