உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஏலத்தில் வரத்து அதிகரிப்பு :தேயிலை விற்பனையில் ஏற்றம் ;ரூ.11.16 கோடி மொத்த வருமானம்

ஏலத்தில் வரத்து அதிகரிப்பு :தேயிலை விற்பனையில் ஏற்றம் ;ரூ.11.16 கோடி மொத்த வருமானம்

குன்னுார்,:நீலகிரியில் தேயிலை ஏலத்தில் வரத்து மற்றும் விற்பனையில் ஏற்றம் கண்டு மொத்த வருமானம், 11.16 கோடி ரூபாய் கிடைத்தது. குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 18வது ஏலத்தில், '10.15 லட்சம் கிலோ இலை ரகம்; 3.03 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 13.18 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது. '8.75 லட்சம் கிலோ இலை ரகம், 2.73 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, 11.48 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. 11.16 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 97.19 ரூபாயாக இருந்தது ; கிலோவுக்கு ஒரு ரூபாய் வரை வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த ஏலத்தை விட, இந்த ஏலத்தில், 1.60 லட்சம் கிலோ வரத்து அதிகரித்ததுடன், 52 ஆயிரம் கிலோ கூடுதலாக விற்றது.மொத்தம், 87.07 சதவீதம் தேயிலை துாள் விற்ற நிலையில், 1.70 லட்சம் கிலோ துாள் தேக்கமடைந்தது. 68 லட்சம் ரூபாய் மொத்த வருமானம் அதிகரித்தது. மாவட்டத்தில், கடும் வெயிலில் பசுந்தேயிலை பாதிக்கப்பட்ட நிலையில், ஓரிரு நாட்கள் பெய்த மழை சற்று தேயிலை விவசாயத்திற்கு ஆறுதலை அளித்துள்ளது. பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.'கிளன் வர்த்' எஸ்டேட்டின் தேயிலை துாள் கிலோ, 229 ரூபாய்; சாம்ராஜ் டீ எஸ்டேட் தேயிலை துாள்,175 ரூபாய் என அதிகபட்ச விலைக்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி