| ADDED : மே 31, 2024 12:26 AM
குன்னுார்:குன்னுாரில் சுற்றுலா வழிகாட்டுதலுக்கு 'கியூ ஆர் கோடு' வரைபடம் வெளியிடப்பட்டது.நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குன்னுாரில் லாம்ஸ்ராக், டால்பின் நோஸ், சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காவை பார்வையிட வருகை தருகின்றனர்.சுற்றுலா பயணிகளின் வழிகாட்டுதலுக்காக சுற்றுலா மையங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், கியூ ஆர் கோடுடன் கூடிய வழிகாட்டி வரைபடத்தை, குன்னுார் ஜே.சி.ஐ., வெளியிட்டது.அதில், சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் மற்றும் கோத்தகிரியில் உள்ள கோடநாடு வியூ பாயிண்ட், கேத்தரின் நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலா மையங்களின் கியூ ஆர் கோடு கொண்ட வரைபடம் வெளியிடப்பட்டது. இதனை ஏ.டி.எஸ்.பி., சவுந்தரராஜன் துவக்கி வைத்து பேசினார். சுற்றுலா பயணிகளுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.