உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆறு வட்டத்தில் மூன்று நாட்கள் ஜமாபந்தி பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம்

ஆறு வட்டத்தில் மூன்று நாட்கள் ஜமாபந்தி பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம்

ஊட்டி, - 'நீலகிரியில் மூன்று நாட்கள் நடக்கும் ஜமாபந்தியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 6 தாலுகாவில் இம்மாதம், 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. அதன்படி, 'குந்தா வட்டத்தில் கலெக்டர் தலைமையில், 19 மற்றும் 20ம் தேதி; பந்தலுார் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், 19 மற்றும் 20ம் தேதி; குன்னுார் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில், 19, 20 மற்றும் 21ம் தேதி,' என, மூன்று நாட்கள் நடக்கிறது.ஊட்டி வட்டத்தில் ஆர்.டி.ஓ., தலைமையில், 19, 20 மற்றும் 21ம் தேதி என, மூன்று நாட்கள் நடக்கிறது. கோத்தகிரி வட்டத்தில் குன்னுார் ஆர்.டி.ஓ., தலைமையில், 19, 20 மற்றும் 21ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. கூடலுார் வட்டத்தில் கூடலுார் ஆர்.டி.ஓ., தலைமையில், 19 மற்றும் 20ம் தேதிகளில் ஜமாபந்தி நடக்கிறது. ஜமாபந்தி நடக்கும் நாட்களில் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று தங்களது கோரிக்கைகளை வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி