உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்: மாணவியருக்கு நீதிபதி அட்வைஸ்

முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்: மாணவியருக்கு நீதிபதி அட்வைஸ்

குன்னுார்:குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுாரியில் உலக நீதி நாளையொட்டி சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா தலைமை வகித்தார்.நீலகிரி மாவட்ட முதன்மை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் செந்தில்குமார் தலைமை வகித்து பேசுகையில்,''முதன் முதலில் இலக்கியங்களின் வழியாகவே சட்டம் பயணித்து வந்துள்ளது. உரிமையை நிலைநாட்ட போராடியவர் கண்ணகி. மாணவியர் தங்களது உரிமைக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும். ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் பெண்மணி வேலுநாச்சியார் என்பது பலருக்கும் தெரியவில்லை. உண்மைக்கும் சட்டத்திற்கும் அனைவரும் கட்டுப்பட வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் மொபைல் போன்களில் ரீல்ஸ் பார்ப்பது அதிகரித்துள்ளது. இது போன்று மொபைல்களில் அடிமை யாகாமல் வாழ்வின் முன்னேற்றத்திற்கான செயல் முறைகளில் மாணவியர் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, கல்லுாரியில் இதழியல் பட்ட படிப்பில் பயிலும் மாணவிகளின் மாதிரி கலை பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார். குன்னுார் மேஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி அப்துல் சலாம் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தமிழ்துறை முனைவர் குணசீலி ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை