கேரள நிலச்சரிவு மீட்பு சம்பவங்கள் பூக்கோலத்தில் பிரதிபலித்த சோக நினைவுகள்
பந்தலுார்: தமிழக எல்லையில் உள்ள, வயநாடு நிலச்சரிவு மீட்பு சம்பவத்தை பிரதிபலித்த பூக்கோலம் சோக நினைவுகளை கண்முன் கொண்டு வந்தது.--கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த ஜூலை, 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில், நுாற்றுக்கணக்கான உடல்கள் மண்ணுக்கடியில் புதைந்து சிதைந்து போனது. அதில், சூஜிபாறை என்ற இடத்தில் வனப்பகுதியில் சிக்கிக்கொண்ட பழங்குடியின குழந்தைகளை, வனத்துறையினர் போராடி மீட்டு கொண்டு வந்த சம்பவம் நடந்தது.வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, கேரளா மாநிலத்தில் கடந்த, 10 நாட்களாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இல்லாமல் போனது.இந்நிலையில், கண்ணனுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நிலச்சரிவின் போது குழந்தைகளை வனத்துறையினர் மீட்டு கொண்டு வந்த காட்சியை நினைவுபடுத்தும் விதத்தில், பூக்கோலம் போடப்பட்டிருந்தது. இதனை பார்வையிட்ட மக்கள் சோக சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.