உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பி.ஜி.வி., மேல்நிைலப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பி.ஜி.வி., மேல்நிைலப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலஷ்டமி விழா நடந்தது.விழாவை ஒட்டி குழந்தைகள் கிருஷ்ணராகவும், ராதையாகவும் வேடமணிந்து நடனங்கள் மற்றும் நாடகங்கள் நடத்தினர். மழலையர் பிரிவு குழந்தைகளின் நடனம், பாட்டு பார்வையாளர்களை கவர்ந்தது. பள்ளி தாளாளர் டாக்டர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன், மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் வல்சலா உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை