உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / -சேரம்பாடியில் மொபைல் போன் சிக்னல் பாதிப்பு; வாக்கி- டாக்கிக்கு மாறிய வனத்துறை

-சேரம்பாடியில் மொபைல் போன் சிக்னல் பாதிப்பு; வாக்கி- டாக்கிக்கு மாறிய வனத்துறை

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி டான்டீ, ஏலியாஸ் கடை பகுதிகளில், மொபைல் போன் சிக்னல் இல்லை. இதனால், இந்த பகுதியில் எந்த தகவல் பரிமாற்றங்களும் மேற்கொள்ள இயலாத நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, இந்த பகுதியில் 'புல்லட்' என்று அழைக்கப்படும் யானை, தொடர்ச்சியாக குடியிருப்புகளை இடித்து வருவதால், அதனை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், யானை நடமாட்டம் குறித்து உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள இயலாத நிலையில், வனத்துறை பணியாளர்களுக்கு, 54 வாக்கி--டாக்கி வழங்கப்பட்டு உள்ளது.'இ--பேக்' முறையில், 200 மீட்டர் தொலைவுக்கு இணைப்பு கிடைக்கும் வகையில், இது செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்கள், இதனை ஒட்டிய வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் குறித்து உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து, பயன் பெற முடியும். இதன் பயன்பாடு குறித்து, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் உதவி வன பாதுகாவலர் கருப்பையா ஆகியோர் வனத்துறையினருக்கு பயிற்சி மற்றும் விளக்கங்களை அளித்தனர்.

வாசலில் மிளகாய் துாள் தடவிய துணி...

பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று முன்தினம் யானை ஊருக்குள் வராமல் தடுக்க 'மஸ்து' ஏற்பட்ட யானைகளின் சாணம் தெளிக்கப்பட்டது. நேற்று மிளகாய் துாள், வேப்ப எண்ணெய் தடவிய துணிகளை வீட்டு வாசல்களில் தொங்கவிடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். 'இதன் வாசனையை நுகரும் யானைகள் அங்கிருந்து வெளியேறும்,' என, கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில்,'புல்லட் யானையை முதுமலைக்கு பிடித்து செல்ல வேண்டும்,' என, வலியுறுத்தி, 26ம் தேதி சேரம்பாடி வனச்சரகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை