உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கூடலுாரில் ஓட்டு சேகரித்தார்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கூடலுாரில் ஓட்டு சேகரித்தார்

கூடலுார்;நீலகிரி லோக்சபா தொகுதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார், மசினகுடி, கூடலுார், ஓவேலி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார். கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்த கூட்டத்தில் ஜெயக்குமார் பேசியதாவது:இங்கு போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை கூறி ஓட்டு கேட்டு வருகின்றனர். வெற்றி பெற்ற பின் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை.தமிழகத்தில் அரசு நிதியில் கட்டப்பட்ட பல அரசு கட்டடங்கள் பயன்படுத்தாமல் உள்ளன. அவைகளை சீரமைத்து, தங்கும் விடுதிகளாக மாற்றுவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த முடியும். அரசுக்கு வருவாய் கிடைக்கும். இதனால், படித்த, படிக்காத அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாய உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றினால் விவசாயிகள் பயன்பெற முடியும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ