உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பொன்மலையில் இருந்து வந்த நீலக்குறிஞ்சி புதுப்பொலிவான டீசல் இன்ஜின் வெள்ளோட்டம் புதுப்பொலிவான டீசல் இன்ஜின் வெள்ளோட்டம்

பொன்மலையில் இருந்து வந்த நீலக்குறிஞ்சி புதுப்பொலிவான டீசல் இன்ஜின் வெள்ளோட்டம் புதுப்பொலிவான டீசல் இன்ஜின் வெள்ளோட்டம்

குன்னுார்:குன்னுாரில் இருந்து பொன்மலைக்கு சென்ற நீலக்குறிஞ்சி இன்ஜின் புது பொலிவாக்கப்பட்டு நேற்று வெள்ளோட்டம் நடந்தது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம், குன்னுார் வரை மலை ரயில் இயக்க நுாற்றாண்டு காலமாக நிலக்கரி நீராவி இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டது.கடந்த, 2002ல், பர்னஸ் ஆயில் இன்ஜின்களாக மாற்றப்பட்டு தற்போது டீசலுக்கு மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குன்னுாரில் இருந்து திருச்சி பொன்மலைக்கு, '37396 எக்ஸ் கிளாஸ்' நீலக்குறிஞ்சி இன்ஜின் கொண்டு செல்லப்பட்டது.அங்கு புதுப்பொலிவு படுத்தப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டது. நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து இரண்டு பெட்டிகளுடன் குன்னுாருக்கு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.குன்னுாரில் உள்ள பணிமனையில் இன்ஜின் பணிகள் முடித்து, 10 நாட்களில் குன்னுார் மேட்டுப்பாளையம் இடையே சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்