உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி பதிவு எண் வாகனங்களுக்கு இ -- பாஸ் தேவையில்லை

நீலகிரி பதிவு எண் வாகனங்களுக்கு இ -- பாஸ் தேவையில்லை

ஊட்டி:ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வரும், 7ம் தேதி முதல், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் 'இ -பாஸ்' பெற்று வர வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள், நீலகிரி மாவட்ட பதிவு எண் 'டி.என்-43' பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு, '-பாஸ்' தேவையில்லை.மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாங்கி, நீலகிரி மாவட்டத்தில் வாகன உரிமை மாற்றம் செய்திருப்பவர்கள், வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று மற்றும் நடப்பில் உள்ள புகை சான்று ஆகியவற்றுடன், ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகலாம். தொடர்ந்து, ஆவணங்களை சரிபார்த்து 'இ-பாஸ்' வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை