உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் இரும்பு தடுப்பு இல்லை : விபத்து அபாயம் அதிகரிப்பு

சாலையில் இரும்பு தடுப்பு இல்லை : விபத்து அபாயம் அதிகரிப்பு

கோத்தகிரி,: கோத்தகிரி-- மேட்டுப்பாளையம் சாலையில், சில இடங்களில் இரும்பு தடுப்புகள் உடைந்துள்ளதால், வாகனங்கள் சென்று வரும் போது, விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.சமவெளி பகுதியில் இருந்து, நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்ல, குன்னுார், கோத்தகிரி சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பேரிடர் நாட்கள் மற்றும் கோடை விழா நாட்களில், கோத்தகிரி ஒரு வழி சாலையாக அறிவிக்கப்படுகிறது.கொண்டை ஊசி வளைவுகள் குறைந்து காணப்படும் வளைவுகள் விரிவுப்படுத்தி, நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ள, கோத்தகிரி சாலையில், பயணிக்க சுற்றுலா பயணிகள் உட்பட, பொதுமக்கள் விரும்புகின்றனர். வாகனங்கள் சிரமம் இன்றி சென்று வருகின்றன.விபத்துகள் ஏற்படும் தாழ்வான பகுதிகளில், சிமெண்ட் தடுப்புச் சுவருடன், தேவையான இடங்களில் இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதில், சில தடுப்புகள் உடைந்துள்ளன. குறிப்பாக, பவானிசாகர் காட்சி முனை கீழ்பகுதியில் உள்ள வளைவில் தடுப்பு சுவர்களுக்கு இடையே, இரண்டு இடங்களில் போடப்பட்ட இரும்பு தடுப்புகள் உடைந்துள்ளன. இதனால், கோத்தகிரியில் இருந்து, மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, இதே பகுதியில் 'பிக்-அப்' வாகனம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் தேவையான இடங்களில், தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை