உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்கள்

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்கள்

கூடலுார்;கூடலுார் கோழிக்கோடு சாலை ஓரங்களில் இடையூறாக, நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களை அகற்ற வேண்டும்.கூடலுாரில், விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், கோழிக்கோடு சாலை, செம்பாலா முதல் நந்தட்டி வரை, சாலை ஓரங்களில் இருபுறமும் பயனற்ற பழைய வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். சில இடங்களில், வாகனங்களை சுற்றி முட்புதர்கள் வளர்ந்துள்ளது.மேலும், அப்பகுதியில் உள்ள தனியார் பணிமனைக்கு வரும், வாகனங்களையும் அவ்வப்போது சாலையில் நிறுத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி வாகன போக்குவரத்துக்கு ஏற்படுகிறது. மக்கள் நடந்து செல்ல, சிரமப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியுள்ளனர்.மக்கள் கூறுகையில், 'பழைய வாகனங்களை அதன் உரிமையாளர்களும், பழுது நீக்க வரும் வாகனங்களை, தனியார் பணிமனை ஊழியர்களும், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் இருபுறமும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்கள் ஆபத்து உள்ளது. அரசு துறையினர் ஒருங்கிணைந்த இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களை நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை