உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாக்கடை நீரில் சறுக்கி விழும் மக்கள்

சாக்கடை நீரில் சறுக்கி விழும் மக்கள்

மேட்டுப்பாளையம் : சிறுமுகை சாலையில் ஓடும் கழிவு நீரால், அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், சறுக்கி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லை அருகே, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி பகுதிகள் அமைந்துள்ளன. தாசில்தார் அலுவலகம் அருகே, சிறுமுகை சாலையில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவைய்யா நகர் உள்ளது.இந்த நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகளும், ஊராட்சி அலுவலகமும் செயல்படுகிறது. இக்குடியிருப்பில், பலர் தங்கள் வீடுகளில் சோக்பிட் அமைத்து, கழிவு நீரை அதில் தேக்கி வருகின்றனர். ஆனால் முதல் வீதியில் உள்ள வீடுகளின் கழிவுநீர், சிறுமுகை சாலையில் ஓடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தேவைய்யா நகரில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர், சிறுமுகை சாலையில் ஓடுகிறது. இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்களில், பலர் கழிவுநீரில் சறுக்கி கீழே விழுகின்றனர்.கழிவுநீர் செல்ல, சாலை ஓரம் சாக்கடை அமைக்கும்படி, பலமுறை ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம்.ஆனால் ஊராட்சி தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும் இவ்வாறு பொதுமக்கள் கூறினர். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'சாலையில் கழிவுநீர் செல்வதை, ஊராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும். தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஊராட்சி நிர்வாகத்துக்கு 'மெமோ' அனுப்பப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி