உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாலத்தில் ஏற்பட்ட அடைப்பு சீரமைப்பு

பாலத்தில் ஏற்பட்ட அடைப்பு சீரமைப்பு

கூடலுார்:கூடலுார் தொரப்பள்ளி அருகே, குணில் சாலையில் உள்ள பாலத்தில் மூங்கில், மரங்களால் ஏற்பட்ட அடைப்பு சீரமைக்கப்பட்டது.கூடலுார் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடைமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் அவ்வப்போது மழை வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் போது, தொரப்பள்ளி அருகே உள்ள, குணில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், அடித்து வரப்பட்ட மூங்கில் ஆற்றிலுள்ள தடுப்பணையில் கிடந்தது.அதே போன்று, ஆற்றின் கரையோரம் இருந்த, மரம் சாய்ந்து குணில் சாலையில் உள்ள பாலத்தின் குறுக்கே விழுந்தது அடைப்பு ஏற்பட்டது, இதனால், ஆற்று நீர் பாலத்தை கடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியை துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ரேகா, கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித், முதுமலை ஊராட்சி கவுன்சிலர் நாராயணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பொக்லைன் உதவியுடன் மூங்கில் மற்றும் மரத்தை அகற்றி சீரமைத்தனர்.கவுன்சிலர் நாராயணன் கூறுகையில்,''மரம், மூங்கில்களால் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் ஆற்று நீர் செல்ல தடை ஏற்பட்டது. மேலும் மழையின் போது, ஆற்றில் ஏற்படும் வெள்ளம், பாலத்தைக் கடந்து செல்ல முடியாமல், விவசாய தோட்டத்தில் நுழையும் சூழல் இருந்தது. தற்போது, அப்பகுதியை வருவாய் துறையினர் சீரமைத்துள்ளதால், பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ