உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பீக் ஹவர் நேரத்தில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு

பீக் ஹவர் நேரத்தில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு

கூடலுார்:கூடலுார் நகரில், 'பீக் ஹவர்' நேரத்தில் கனரக வாகனங்களை நிறுத்தி பொருட்கள் ஏற்றி இறக்க கூடாது,' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.கூடலுார் நகரில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் நாட்களில், 'பீக் ஹவர்' நேரமான, காலை 8:30 முதல் 9:30 மணி வரை நகரில் கனரக வாகனங்கள் இயக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.மேலும், 'காலை, 8:00 முதல் 11:00 மணி வரையும், மதியம், 3:00 முதல் இரவு 7:00 மணி வரை நகரில் கனரக வாகனங்கள் நிறுத்தி பொருட்கள் ஏற்ற கூடாது,' என, அறிவுறுத்தி உள்ளனர்.போலீசார் கூறுகையில், 'பள்ளி செயல்படும் நாட்களில், காலை, 8:30 மணி முதல் 9:30 மணி வரை நகரில் கனரக வானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா, பந்தலுாரில் இருந்து கூடலுார் வரும் கனரக வாகனங்கள் கோழிக்கோடு சாலை இரும்புபாலம் பகுதியிலும்; கர்நாடகாவிலிருந்து வரும் வாகனங்கள், மைசூரு தேசிய நெடுஞ்சாலை மாக்கமூலா பகுதியிலும் நிறுத்தப்படுகிறது. அதனை, போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதேபோன்று காலை, மாலை 'பீக் ஹவர்' நேரங்களில் நகரில் கனரக வாகனங்கள் நிறுத்தி பொருள்கள் ஏற்ற கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !