உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வேலிவியூ பகுதியில் சாலை விரிவுபடுத்தாததால் விபத்து அபாயம்

வேலிவியூ பகுதியில் சாலை விரிவுபடுத்தாததால் விபத்து அபாயம்

ஊட்டி;ஊட்டி -குன்னுார் இடையே, வேலிவியூ பகுதியில், சாலை விரிவு படுத்தாததால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.ஊட்டியிலிருந்து குன்னுார் மார்க்கத்தில் அதிக அளவில் அரசு பஸ்கள் உட்பட, தனியார் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கோடை விழா நாட்களில் சுற்றுலா வாகனங்களில் எண்ணிக்கையும் அதிகமாக சாலையில் உள்ளது. உள்ளூர் வாகனங்களின் இயக்கமும் அதிகமாக உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சாலை விரிவுபடுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையான, வேலிவியூ பகுதியில் சாலை விரிவுபடுத்தப்படாமல், பணிப்பாதையில் விடுபட்டுள்ளது.கட்டுமான பொருட்கள் சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு அதிகரித்துள்ளது.வளைவாக உள்ள வேலிவியூ பகுதியில் கடந்த காலங்களில் விபத்துகள் நடந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.எனவே, நெடுஞ்சாலை துறையினர் விடுபட்ட சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை