உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோர ஆக்கிரமிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சாலையோர ஆக்கிரமிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பந்தலுார் : பந்தலுார் அருகே சாலையோர ஆக்கிரமிப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.பந்தலுார் அருகே அம்பலமூலா, முள்ளன்வயல், வெள்ளேரி மற்றும் நெல்லியாளம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதி சாலை ஓரங்களில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான, காலி இடங்களை பலரும் ஆக்கிரமிப்பு செய்து, விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சாலைகளில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாமல் டிரைவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகள் நாளடைவில் கட்டடங்களாக மாற வாயப்புள்ளது.இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, இப்பகுதியில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை