மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
8 hour(s) ago
குன்னுார்;குன்னுார்-- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர முட்புதர்கள் அகற்றப்படாமல் உள்ளதால் வாகனங்கள் இயக்க டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.அதில், குன்னுார் ரயில்வே ஸ்டேஷன் முதல் கேஷ் பஜார் வரையிலான சாலையோரத்தில் செடிகள் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.இரு புறமும் கனரக வாகனங்கள் வரும் போது விபத்து அபாயம் உள்ளது. அவ்வப்போது கழிவு நீரும் இப்பகுதிகளில் செல்வதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள் சார்பில் புகார் தெரிவித்தும் தீர்வு காணப்படவில்லை. எனவே, நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8 hour(s) ago