உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உலா வரும் கால்நடைகள்; வாகனங்களை இயக்க சிரமம்

உலா வரும் கால்நடைகள்; வாகனங்களை இயக்க சிரமம்

குன்னுார் : குன்னுார்-கோத்தகிரி சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. குறிப்பாக, குன்னுார் பஸ் ஸ்டாண்ட், வி.பி.,தெரு மற்றும் கோத்தகிரி சாலையில் மாடுகள் ஆங்காங்கே உலா வருகிறது.ரயில்வே குடியிருப்பு சாலை பிரியும் வளைவு பகுதியில், தொடர்ந்து முகாமிடும் கால்நடைகளால் சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. சில சமயங்களில் இவை சாலைகளில் உறங்குகிறது. இதனால், அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.எனவே, கால்நடைகளை சாலையில் விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி