உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் கடும் குளிரிலும் மூத்தோர் ஹாக்கி போட்டி

குன்னுாரில் கடும் குளிரிலும் மூத்தோர் ஹாக்கி போட்டி

குன்னுார்:குன்னுார் அரசு அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில், 'ஹாக்கி நீலகிரி' அமைப்பு சார்பில் நட்பு ரீதியான மூத்தோர் ஹாக்கி போட்டி நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், சென்னை, நீலகிரி அணியினர் ஹாக்கி விளையாடி மகிழ்ந்தனர். சிறப்பு விருந்தினராக 'டிம்பர்டாப்' பள்ளி தாளாளர் மேரியன் ஓட்டர் பங்கேற்று பேசினார்.'ஹாக்கி நீலகிரி' அமைப்பின் தலைவர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார். நிர்வாகி பாலமுருகன் வாழ்த்தி பேசினார். பொருளாளர் ராஜா நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணைத் தலைவர் சுரேஷ்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்