உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கழிவு நீர் சுத்திகரித்து குளத்தில் விட திட்டம்; நீர் வள ஆதாரத்துறையினர் நடவடிக்கை

கழிவு நீர் சுத்திகரித்து குளத்தில் விட திட்டம்; நீர் வள ஆதாரத்துறையினர் நடவடிக்கை

சூலுார் : 'நடந்தாய் வாழி காவேரி திட்டம் செயல்படுத்தப்படும்போது, கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு ஆச்சான் குளத்துக்கு விடப்படும்' என, நீர் வள ஆதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ், முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பிய மனுவில், 'நடந்தாய் வாழி காவேரி திட்டத்தில் நொய்யலின் துணை ஆறான கவுசிகா நதியை இணைக்க வேண்டும். நீலம்பூர் ஆச்சான் குளத்துக்கு கழிவு நீரை சுத்திகரித்து அனுப்ப வேண்டும்' என்பன உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார். அந்த மனுவுக்கு, கோவை பாசன உப கோட்ட நீர் வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அளித்துள்ள பதில் விபரம்:நொய்யல் ஆறு, அதன் உப நதிகளில் கலக்கும் கழிவு நீரை, நடந்தாய் வாழி காவேரி திட்டத்தின் கீழ் சுத்திகரிக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. திட்டம் செயலாக்கம் பெறும் போது, கவுசிகா நதியில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும். அத்திகடவு - அவிநாசி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சின்னவேடம் பட்டி குளம் சேர்க்கப்பட்டுள்ளது.நொய்யல் ஆற்றில் மழைக்காலத்தில் வரும் நீர், வழங்கு வாய்க்கால் வழியாக இருகூர் குளத்துக்கு சென்று, அங்கிருந்து ஆச்சான் குளத்துக்கு செல்கிறது. நடந்தாய் வாழி காவேரி திட்டம் செயல்படுத்தப்படும்போது, கழிவு நீரை சுத்திகரித்து ஆச்சான் குளத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். நிதி ஒதுக்கீடு கிடைக்கும் போது, குளம் தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை