மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
10 hour(s) ago
அன்னுார்;கோவை கலெக்டர் கிராந்தி குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில், தன்னிறைவு பெற்ற மற்றும் பார்வைக்கு தூய்மையாக விளங்கும் கிராம ஊராட்சிகளை, முன்மாதிரி கிராமமாக அறிவிக்கும் படி அரசு தெரிவித்துள்ளது. இதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று (31ம் தேதி) காலை 11:00 மணிக்கு 19 ஊராட்சிகளில் நடத்த வேண்டும். அன்னுார் ஒன்றியத்தில் அல்லப் பாளையம், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சிகளும், சர்க்கார் சாமக் குளம் ஒன்றியத்தில் கொண்டையம்பாளையம் ஊராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சூலூர் ஒன்றியத்தில் பட்டணம், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம் ஊராட்சிகளும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் குமாரபாளையம், பாப்பம்பட்டி, ஜல்லிப்பட்டி ஊராட்சிகளும், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நஞ்சுண்டாபுரம், வடக்கிபாளையம் ஊராட்சிகளும், காரமடை ஒன்றியத்தில் ஓடந்துறை, காளம் பாளையம், வெள்ளியங்காடு ஊராட்சிகளும் மற்றும் ஆனைமலை, என 19 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து மக்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். கூட்டத்தில் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். முன் மாதிரி கிராமம் குறித்து எடுத்துக் கூறி தீர்மானம் நிறைவேற்றி, அனுப்ப வேண்டும்.ஊராட்சியில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை பயன்படுத்துதல் வேண்டும். திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலையை தக்க வைக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் தெரிவித்துள்ளார்.
10 hour(s) ago