மேலும் செய்திகள்
தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை எதிர்த்து மறியல் போராட்டம்
11 hour(s) ago
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
11 hour(s) ago
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள வக்பு வாரிய நிறுவனங்களில் பணியாற்றும் உலமா மற்றும் பணியாளர்களுக்கு, இரு சக்கர வாகனங்கள் வாங்க, மானியம் வழங்கப்படுகிறது. 25 ஆயிரம் மானியம்
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதி உள்ளவர்களுக்கு, வாகனத்தின் மொத்த விலையில், 25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ், தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வக்பு வாரியத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தப்பட்சம், 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். மேலும், 18 முதல், 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைத்தப்பட்ச கல்வி தகுதி தேவையில்லை. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, ஆதார் அட்டை, வக்பு வாரிய அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று, வயது சான்று மற்றும் புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.மாற்றுத்திறனாளியாக இருப்பின், உரிய அலுவலரிடம் பெறப்பட்டச் சான்று, சாதி சான்று, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், பணிபுரிந்த ஆண்டுகளுக்கான கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.வாகனம் வாங்குவதற்கான விலைப் புள்ளி இணைக்கப்பட வேண்டும். அதற்காக பயனாளிகள் இருசக்கர வாகனத்தை சொந்த நிதியிலோ அல்லது வங்கி கடன் மூலமாகவோ வாங்கலாம்.பயனாளி முழுத்தொகை செலுத்தி இருசக்கர வாகனம் வாங்கி இருப்பின், இதர தகுதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அதற்கான மானிய தொகை வழங்கப்படும்.மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
11 hour(s) ago
11 hour(s) ago